பிரான்ஸ் ராணுவத்தினர் மீது தாக்குதல்: வீரர் ஒருவர் பலி
ஈராக்கில் பிரான்ஸ் ராணுவ முகாம் ஒன்றின் மீது ஈரான் ஆதரவு அமைப்பொன்று நடத்திய தாக்குதலில் பிரான்ஸ் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் வீரர் ஒருவர் பலி
ஈராக்கிலுள்ள Erbil பகுதியில், ஈராக் ராணுவத்துக்கு பயிற்சி அளித்துவருகிறார்கள் பிரான்ஸ் வீரர்கள்.

இந்நிலையில், நேற்று வீரர்கள் முகாமிட்டிருந்த இடம் ட்ரோன் மூலம் தாக்கப்பட்டுள்ளது.
Iran War:
— T (@T59544082) March 12, 2026
March 12, 2026
Drone attack wounds six French soldiers at joint Peshmerga-French base in Makhmour (Erbil province, Iraq):
French Army confirms injuries during counter-terrorism training; soldiers received medical care.
Local authorities report two drones struck… pic.twitter.com/Q7pjUN2aqE
அந்த தாக்குதலில், ஆறு வீரர்கள் காயமடைந்துள்ளார்கள், Chief Warrant Officer Arnaud Frion என்னும் வீரர் உயிரிழந்துவிட்டார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், ஈரான் ஆதரவு அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரான்ஸ் வீரர்கள் மீதான தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், Arnaud Frion பிரான்சுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளார் என்றும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் சமூக ஊடகமான எக்ஸில் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |