பிரான்சின் 48 மாடி கட்டிடத்தில் சரசரவென ஏறிய 60 வயது ஸ்பைடர்மேன்! ஆச்சரியப்படுத்திய வீடியோ
அலைன் ராபர்ட் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட உயரமான கட்டமைப்புகளில் ஏறி சாதனை படைத்துள்ளார்
அனுமதியின்றி அடிக்கடி கட்டிடங்களில் ஏறுவதால் அலைன் ராபர்ட் அடிக்கடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
பிரான்சில் தனது 60 வயது இலக்கை அடைய வேண்டும் என 48 மாடி கட்டிடத்தில் ஏறி நபர் ஒருவர் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பிரெஞ்சு ஸ்பைடர்மேன் என அழைக்கப்படுபவர் அலைன் ராபர்ட். இவர் துபாயின் புர்ஜ் கலீஃபா, ஈபிள் கோபுரம், சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலம் ஆகியவற்றில் ஏறியதன் மூலம் இந்தப் பெயரை பெற்றார்.
Alain Robert, the French 'Spiderman,' scaled a 48-story skyscraper in Paris to celebrate his 60th birthday https://t.co/kotWiUMtQu pic.twitter.com/UIjBgdMtGE
— Reuters (@Reuters) September 18, 2022
இந்த நிலையில் பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள 187 மீற்றர் உயரமுள்ள 48 மாடி கட்டிடத்தில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் ஏறி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அலைன் ராபர்ட் கூறுகையில்,
'60 வயது என்பது ஒரு பிரச்சனை இல்லை என்ற செய்தியை மக்களுக்கு கூற விரும்புகிறேன். நீங்கள் இன்னுமும் விளையாடலாம், சுறுசுறுப்பாக இருக்கலாம், அற்புதமான விடயங்களை செய்யலாம்.
Reuters Photo
நான் 60 வயதை எட்டியதும் மீண்டும் அந்த கோபுரத்தில் ஏறுவேன் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நானே உறுதியளித்தேன். ஏனெனில் 60 என்பது பிரான்சில் ஓய்வு பெறும் வயதைக் குறிக்கும் மற்றும் அது ஒரு நல்ல உணர்வு என்று நான் நினைத்தேன்' என தெரிவித்துள்ளார்.