ஏற்றம் காணும் பிரெஞ்சு பங்குச் சந்தை... உயரும் யூரோ மதிப்பு: முதலீட்டாளர்களின் கணிப்பு இதுதான்
பிரான்ஸ் தேர்தலில் தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம் முதல் சுற்றில் உறுதியாகியுள்ள நிலையில் பிரெஞ்சு பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது.
தீவிர வலதுசாரிகள் கூட்டணி
பிரான்சில் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முதல் முறையாக தீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற இருக்கிறது. தேர்தலின் முதல் சுற்றில் 34 சதவிகித வாக்குகளுடன் National Rally கட்சி ஆட்சியை கைப்பற்றலாம் என்ற நிலையில் முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் பிரெஞ்சு பங்குச் சந்தை Cac 40 சுமார் 1.5 சதவிகித ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. அத்துடன் அமெரிக்க டொலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு 0.5 சதவிகிதம் உயர்வை பதிவு செய்துள்ளது.
ஆனால் முதலீட்டாளர்களின் கணிப்பு வேறாக உள்ளது. தீவிர வலதுசாரிகள் அல்லது தீவிர இடதுசாரிகளுக்கு ஆட்சி அமைக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றே கருதுகின்றனர்.
இதனால் அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களுடன் தீவிர வலதுசாரிகள் கூட்டணி வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க முடியாமல் போகலாம் என்றே கூறுகின்றனர்.
12 மில்லியன் வாக்குகள்
முன்னதாக கருத்துக்கணிப்புகளில் குறிப்பிட்டது போலவே National Rally கட்சி 34 சதவிகித வாக்குகளை மொத்தமாக கைப்பற்றியுள்ளது. இரண்டாவது இடத்தில் தீவிர இடதுசாரிகளும் இமானுவல் மேக்ரானின் கூட்டணி மிக மோசமான நிலையில் மூன்றாவது இடத்திலும் தள்ளப்பட்டுள்ளது.
National Rally கட்சி மொத்தமாக 12 மில்லியன் வாக்குகளை கைப்பற்றியுள்ளது. 2022ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்குகளைவிடவும் மூன்று மடங்கு அதிக வாக்குகளை National Rally கட்சி அள்ளியுள்ளது.
தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கத்தை முறியடிக்க உருவாக்கப்பட்ட தீவிர இடதுசாரிகளின் கூட்டணி 29 சதவிகித வாக்குகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |