பிரான்சிலிருந்து எல்லை தாண்டி நடந்த கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது
பிரான்சிலிருந்து எல்லை தாண்டி சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.
கொள்ளை கும்பல் சிக்கியது
பிரான்ஸ் மற்றும் சுவிஸ் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட ஆபரேஷன் ஒன்றில், பிரான்சிலிருந்து எல்லை தாண்டி சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.
பிரான்சிலுள்ள Pays de Gex என்னுமிடத்தை மையமாகக் கொண்ட ஒரு கொள்ளை கும்பல், சுவிட்சர்லாந்தின் Neuchâtel மாகாணத்துக்குள் நுழைந்து விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆடம்பர கார்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன், சுவிஸ் மாகாணங்கள் பலவற்றிலுள்ள துப்பாக்கிக் கடைகளை உடைத்து கொள்ளையடிப்பதையும் அந்த கும்பல் வழக்கமாகக் கொண்டுள்ளது.
பிரான்சை மையமாகக் கொண்டு இயங்கும் அந்த கும்பலின் தலைவர்கள் ஏற்கனவே சிறையிலிருக்கும் நிலையில், அந்த கும்பலுக்கு, 56 கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் பல தாக்குதல் சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது அந்த கும்பல் சிக்கியுள்ள நிலையில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பிரான்சில் விசாரணை நீதிபதி ஒருவர் முன் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |