பிரான்சின் முக்கிய பிரதேசத்தில் புதிய ஊடரங்கு அமுல்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரான்சின் கடல்கடந்த பிரதேசமான குவாடலூப்பில் புதிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவின் நான்காவது அலையை கட்டுப்படுத்த பிரான்ஸ் போராடி வரும் நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குவாலூப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் மேற்கிந்திய தீவான குவாடலூப்பில் ஆகஸ்ட் 4ம் திகதி முதல் ஊரடங்கு அமுலுக்கு வரும் என உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாடலூப்பில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆகஸ்ட் 4ம் திகதி முதல் தொடங்கும் ஊரடங்கு, குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என குவாடலூப் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் கடல்கடந்த பகுதிகளான லா ரியூனியன் மற்றும் மார்டினிக் ஆகியவை வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.