பிரான்ஸ் தீவில் பொதுமுடக்கம் அமுல்! சுற்றுலா பயணிகள் வெளியேற அறிவுறுத்தல்
பிரான்ஸின் கடல்கடந்த பிரதேசமான Martinique தீவில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸின் மேற்கு இந்திய தீவான Martinique-கில் கொரோனா பரவலை எதிர்கொள்ள இன்று முதல் 3 வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அடங்கிய பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுவதாக உள்ளூர் அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே Martinique-கில் மாலை ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் இரவு 7 மணி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தியாவசியமற்ற கடைகள் மற்றும் கடற்கரைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகள் தீவை விட்டு வெளியேறுமாறு Martinique-கில் உள்ள நிர்வாக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குவாடலூப் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரான்சின் லா ரியூனியன் தீவும் கொரோனா ரைவஸை எதிர்கொள்ள கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.