அச்சுறுத்தல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.. பிரான்சுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
பிரித்தானியா மீதான நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்தால் பிரான்சுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பிரித்தானியா சுற்றுச்சூழல் அமைச்சர் George Eustice எச்சரித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பிரெக்சிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகள் பிரச்சினை தீவிரமடைந்ததையடுத்து, பிரித்தானியா படகை பிரான்ஸ் சிறைபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரித்தானியா பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானியா சுற்றுச்சூழல் அமைச்சர் George Eustice, பிரான்ஸ் அச்சுறுத்தல்கள் மிகவும் அதிருப்தியளிக்கிறது.
பிரித்தானியா வர்த்தகத்தை சீர்குலைக்கும் மற்றும் அதன் படகுகள் பிரெஞ்சு துறைமுகங்களை அணுகுவதைத் தடுக்கும் பிரான்ஸ் அச்சுறுத்தல்கள் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டதில்லை, மேலும் நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
பிரான்ஸ் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட படகிற்கு உரிமம் இருந்தது.
இந்த உரிமம் MMO (கடல் மேலாண்மை அமைப்பு) ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய பட்டியலில் இருந்தன. எனவே ஐரோப்பிய ஒன்றியம் உரிமம் வழங்கியது.
சில காரணங்களால், அந்த உரிமம் பட்டியலிலிருந்து திரும்பப் பெறப்பட்டதாக சில செய்திகளைப் பார்க்கிறோம். உரிமம் ஏன் திடீரென திரும்பப் பெறப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என George Eustice கூறினார்.