ஒற்றை ஆளாக 184 மில்லியன் யூரோ மதிப்பிலான லொட்டரியை வென்ற பிரெஞ்சு அதிர்ஷ்டசாலி!
ஒரு பிரெஞ்சு டிக்கெட் வைத்திருப்பவர் ஒற்றை ஆளாக 184 மில்லியன் யூரோ மில்லியன் ஜாக்பாட்டை வென்றுள்ளார்.
இதனால் எல்லா பிரிதானியர்களும் ஏமாற்றமடைவார்கள் என கூறப்படுகிறது, ஏனெனில் இது எல்லா காலத்திலும் பிரித்தானியாவில் அதிக வெற்றி பெற்ற ஒரு லொட்டரியாக இருந்திருக்கும்.
நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) EuroMIllions டிரா விளையாட்டை பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், அயர்லாந்து, லக்சம்பர்க், போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது ஐரோப்பிய நாடுகளில் யூரோ மில்லியன் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
இதில் வெற்றிபெற, 7 எண்கள் சரியாக இருக்க வேண்டும். நேற்று யூரோ மில்லியன்ஸ் வெற்றிபெற்ற எண்கள்: 49, 21, 26, 34, 31, லக்கி நட்சத்திரங்கள் 05 மற்றும் 02. இதனை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒற்ற நபர் வென்றுள்ளார்.
Image: AFP via Getty Images
இந்த ஆண்டு இதுவரை பிரித்தானியா முழுவதும் 5 யூரோ மில்லியன்ஸ் ஜாக்பாட் வெற்றியாளர்கள் உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் ஒருவர் 122 மில்லியன் மற்றும் ஜூன் மாதம் ஒருவர் 111 மில்லியன் யூரோக்களை வென்றுள்ளனர்.