உக்ரைனில் ரகசியமாக இயங்கும் பிரெஞ்சுப் படைகள்
French lawmakers had not been informed of the deployment of the confidential mission: உக்ரைனில் பிரான்ஸ் படைகள் ரகசியமாக இயங்கிவருவதாகவும், அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் பிரான்ஸ் படைகள் ரகசியமாக இயங்கிவருவதாக பிரான்ஸ் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரகசியமாக இயங்கும் பிரெஞ்சுப் படைகள்
உக்ரைனில் இயங்கிவரும் அந்த படைப்பிரிவின் மிஷனுக்கு Volia என பெயரிடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு வானொலி தெரிவித்துள்ளது.

விடயம் என்னவென்றால், இப்படி ஒரு படைப்பிரிவு உக்ரைனில் இயங்கிவருவது குறித்து, பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாதாம்.
அந்த படைவீரர்கள், உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், பிரான்ஸ் வழங்கிய ஆயுதங்களைப் பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டுவருகிறார்கள் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், அந்த படைப்பிரிவு போரிடுவதற்காக செல்லவில்லை, பயிற்சிக்காக மட்டுமே சென்றுள்ளது என்பதால், அரசியல் சாசனப்படி, அதற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை என ராணுவ தரப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.