பிரான்சில் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 60 வயது மூதாட்டி செய்த கேவலமான செயல்!
பிரான்சில் 60 வயது மூதாட்டி ஒருவர், இறந்தவரின் சிறுவயது தோழி என நாடகமாடி, பிணத்திலிருந்து நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு பிரெஞ்சு நகரமான Liévin-ல் கடந்த செவ்வாய்கிழமை இந்த நூதன திருட்டு நடந்துள்ளது.
இது குறித்து பிரெஞ்சு பொலிஸார் கூறியதாவது, 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஒரு வயதான பெண்மணியின் இறுதி சடங்கில் வந்து கலந்து கொண்டுள்ளார்.
அவர், இறந்தவரின் சடலத்தைப் பார்த்து மிகவும் தேம்பி தேம்பி அழுது கண்ணீர் வடித்துள்ளார். ஆனால் அவரை அங்கிருந்த யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
இறந்தவரின் குடுபத்தினர் அவரை அழைத்து விசாரித்தபோது, தான் இறந்தவரின் சிறுவயது தோழி என கூறியுள்ளார்.
அவரை நம்பி, சவப்பெட்டியை திறந்து இறுதி அஞ்சலி செலுத்த அனுமதித்துள்ளனர். அவரும், பிணத்தை கட்டித் தழுவி அழுதுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, சவப்பெட்டியில் பார்க்குபோது இறந்தவரின் உடலில் அணிவிக்கப்பட்டிருந்த நெக்லஸ், காதணி மற்றும் மோதிரம் காணாமல் போனது தெரியவந்தது.
உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விசாரணையில் அந்த பாலிய சிநேகிதி என கூறிக்கொண்டு வந்த பெண்ணின் வேலை என தெரியவந்தது.
மேலும், அதே இடத்தில் காலை நடந்த மற்றோரு நபரின் இறுதிச்சடங்கில், அதே மூதாட்டி கலந்துகொண்டதும், அங்கிருந்த ஒருவரின் பணப்பையை திருடிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மூதாட்டி இறுதிச்சடங்கு நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் பொலிஸாரால் கைது செய்யயப்பட்டார்.