இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற பிரான்ஸ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர், மரத் தடுப்பு ஒன்றின் மீது சாய்ந்தபோது, அந்த மரத்தடுப்பு உடைந்ததில் 9 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
சுற்றுலா வந்த கூட்டம்
சுமார் 25 பிரான்ஸ் நாட்டவர்கள், இந்தியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் Fatehpur Sikri எனும் இடத்துக்குச் சென்றிருந்த நிலையில், ஒரு கூட்டம் மக்கள் செல்பி எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மரத்தாலான ஒரு தடுப்பின் மீது சாய்ந்ததாகவும், பாரம் தாங்காமல் அந்த மரத்தடுப்பு உடைந்ததாகவும் கூறப்படுகிறது.
Dekh news
மற்றவர்கள் கீழே விழாமல் சமாளித்துக்கொள்ள, Esma Ben Yelles (61) என்னும் பெண் மட்டும் கீழே விழுந்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதிகாரிகள் அனுப்பிய கடிதத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன்: பிரான்ஸ் அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
குற்றச்சாட்டுகள்
இதற்கிடையில், அந்த மரத்தடுப்பு சேதமடைந்திருந்ததால்தான் Esma கீழே விழுந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட, தொல்பொருள் துறை அதிகாரிகள் அதை மறுத்துள்ளார்கள்.
மேலும், Esma கீழே விழுந்த உடனே ஆம்புலன்ஸ் வரவில்லை என்றும், அதுவே அவர் உயிரிழக்கக் காரணம் என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |