காதலரைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்மணியின் பரிதாப நிலை

United States of America France
By Balamanuvelan Apr 16, 2026 08:48 AM GMT
Report

இளம் வயதில் தான் காதலித்த நபருடன் வாழ்வதற்காக அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவர், அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

காதலரைத் தேடி...

பிரான்ஸ் நாட்டவரான மேரி தெரேஸ், 1950களில் நேட்டோ ராணுவத் தளம் ஒன்றில் பணிபுரியும்போது பில்லி என்னும் அமெரிக்கரை சந்தித்துள்ளார்.

இருவரும் காதலிக்கத் துவங்கிய நிலையில், 1960களில் அமெரிக்க ராணுவம் நாடு திரும்பவேண்டிய நிலை உருவாக, பில்லி அமெரிக்கா திரும்ப நேர்ந்துள்ளது. 

காதலரைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்மணியின் பரிதாப நிலை | French Women Detained By Us Police

மேரியும் பில்லியும் வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்துகொண்டு தத்தம் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த நிலையில், 2010ஆம் ஆண்டு, சமூக ஊடகம் வாயிலாக மீண்டும் இருவரும் சந்தித்துள்ளார்கள்.

2022ஆம் ஆண்டு, இருவரது துணைவர்களும் மரணமடைந்தபின், பில்லியுடன் வாழ்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் மேரி. 

பிரான்சில் அரசியலாகும் அமெரிக்க ஊடக பிரபலத்தின் கணவரின் இசை நிகழ்ச்சி

பிரான்சில் அரசியலாகும் அமெரிக்க ஊடக பிரபலத்தின் கணவரின் இசை நிகழ்ச்சி

ஆனால், மேரி கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், பில்லி மரணமடைந்துவிட்டார்.

பில்லி இறந்ததும் அவரது சொத்துக்கள் குறித்து மேரிக்கும் பில்லியின் மகனுக்கும் பிரச்சினை உருவாக, மேரியை மிரட்டிய பில்லியின் மகன், மேரி வீட்டுக்குச் செல்லும் தண்ணீர், மின்சாரம், இண்டர்நெட் என அனைத்து இணைப்புகளையும் துண்டித்துள்ளார்.

மேரி வழக்குத் தொடர, அவரது வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே, இம்மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் மேரியை கைது செய்துவிட்டார்கள்.

பல நாட்களாக மேரி எங்கிருக்கிறார் என தெரியாமல் அவரது பிள்ளைகள் தவிக்க, பிறகு பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் சென்று மேரியை சந்தித்துள்ளார்கள்.

தன் தாயை அமெரிக்க அதிகாரிகள் 70 பேருடன் அடைத்துவைத்துள்ளதாகவும், பயங்கர குற்றவாளியைப் போல நடத்துவதாகவும் தெரிவித்துள்ள மேரியின் மகன்களில் ஒருவர், உடல் நல பாதிப்புகள் கொண்ட தங்கள் தாயை எப்படியாவது பிரான்சுக்கு கொண்டுவருவதே தங்களுக்கு இப்போது முன்னுரிமையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US