பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் 18 வயதில் தொலைத்த பரிசுப்பொருள் மீண்டும் தேடி வந்த ஆச்சரியம்: ஒரு சுவாரஸ்ய செய்தி
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் 18 வயதாக இருக்கும்போது தொலைத்த ஒரு பொருள், இப்போது மீண்டும் அவரைத் தேடி வந்திருக்கிறது.
Joseph Carayon என்பவர் தென் பிரான்சிலுள்ள Hérault என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.
Josephக்கு 10 வயது இருக்கும்போது, 1946 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரிலிருந்து திரும்பிய அவரது தந்தை, அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு சைக்கிளை செய்து கொடுத்திருக்கிறார்.
Josephக்கு 18 வயதாகும்போது அந்த அரிய சைக்கிளை அவர் தொலைத்துவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில், பழம்பொருட்கள் சேகரிக்கும் வழக்க கொண்ட Josephஇன் நண்பரான Thomas Christiny என்பவரிடம், ஒரு பழைய பொருட்கள் கடையில் வேலை செய்யும் அவரது நண்பர், தன்னிடம் ஒரு பழைய சைக்கிள் உள்ளதாகவும், அதில் ‘Joseph Carayon, Abeilhan, Hérault’ என்று எழுதப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
Josephஐத் தெரியாதவர்கள் யாரும் அந்த கிராமத்தில் கிடையாதாம். காரணம், Joseph இப்போதும் அங்கு காலையில் செய்தித்தாள் போடுகிறாராம். ஆக, அந்த சைக்கிள் Josephஉடையது என்பதைப் புரிந்துகொண்ட Thomas, அதை விலைக்கு வாங்கி வந்து தன் நண்பர் Josephஇடம் ஒப்படைத்திருக்கிறார்.
மரத்தாலான கைப்பிடிகள் கொண்ட அந்த சைக்கிள் Josephஇன் முதல் சைக்கிளாம். அது இப்போதும் அப்படியே இருப்பதைக் கண்ட அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
அதற்கு அழகாக வர்ணம் பூசி பத்திரமாக வைத்திருக்கிறாராம் Joseph.