வீடியோ கேமில் தோற்றதால் பிரான்ஸ் நாட்டவர் செய்த கொடூர செயல்
வீடியோ கேமில் தோற்ற பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், தன் கோபத்தை ஒரு 11 வயது சிறுமி மீது காட்ட, அந்தச் சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
வீடியோ கேமில் தோற்ற பிரான்ஸ் நாட்டவர் செய்த கொடூர செயல்
பிரான்ஸ் நாட்டவரான Owen L என்பவர், ஒன்லைனில் மற்றொரு நபருடன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்.
வீடியோ கேமில் Owen தோற்க, அவருடன் விளையாடியவர் அவரை கேலி செய்துள்ளார்.
ஆத்திரமடைந்த Owen, தன் கோபத்தை யார் மீதாவது காட்ட முடிவு செய்துள்ளார்.
அப்போது, துரதிர்ஷ்டவசமாக Louise Lasalle (11) என்னும் சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறாள்.
அவளை ஏமாற்றி ஒரு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற Owen, அந்தச் சிறுமியிடமிருந்து பணத்தை திருட முடிவு செய்துள்ளார்.
அவர் கத்தியைக் காட்டி மிரட்ட, அந்தச் சிறுமி பயந்து அலறியதாகவும், பதற்றமடைந்த Owen அந்தச் சிறுமியை கீழே தள்ளி அவளைக் கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளார் Owenஉடைய சட்டத்தரணி.
கத்தியால் குத்தப்பட்ட Louise, அந்த இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டாள்.
பள்ளி முடிந்து பிள்ளை வீட்டுக்கு வராததால் Louiseஇன் பெற்றோர் பொலிசில் புகாரளிக்க, 12 மணி நேரத்துக்குப் பின், பாரீஸிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு இடத்தில் அவளது உயிரற்ற உடல் கிடப்பது தெரியவந்துள்ளது.
Louiseஐக் கொலை செய்த Owen வீட்டுக்குச் சென்று தன் காதலியிடம் தான் பயங்கரமான ஒரு விடயத்தைச் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
அத்துடன், தான் அணிந்திருந்த உடைகளை பிளீச்சில் மூழ்கடித்து குப்பையில் வீசிவிட்டு, கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் வீசி எறிந்துள்ளார் Owen.
தற்போது Owen கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது குற்றத்தை பொலிசாரிடம் தெரிவிக்காததால், அவரது காதலியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |