பெண் நாடாளுமன்ற உறுப்பினரிடம் அத்துமீறும் நோக்கில் பானத்தில் போதைப்பொருளைக் கலந்த பிரான்ஸ் நாட்டவரால் பரபரப்பு
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பானத்தில், அவருக்குத் தெரியாமல் போதைப்பொருளைக் கலந்த பிரெஞ்சு செனேட்டரால், பிரான்ஸ் அரசியலில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
பானத்தில் போதைப்பொருளைக் கலந்த பிரான்ஸ் செனேட்டர்
பிரெஞ்சு செனேட்டரான Joël Guerriau (66) என்பவருடன் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உணவருந்தச் சென்றிருந்த நிலையில், தனக்கு தலைசுற்றுவதாக தோன்றவே, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில், அவர் அருந்திய பானத்தில் போதைப்பொருள் ஒன்று கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து Joël கைது செய்யப்பட்டார்.
வன்புணரும் நோக்கில் போதைப்பொருள் கலந்ததாக சந்தேகம்
Joël, காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அந்தப் பெண்ணை வன்புணரும் அல்லது, அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தும் நோக்கில் அவரது பானத்தில் போதைப்பொருளைக் கலந்ததாக, சந்தேகத்தின் பேரில் பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
மேலை நாடுகள் பலவற்றில், இப்படி பெண்களின் பானத்தில் அவர்களுக்குத் தெரியாமல் போதைப்பொருட்களைக் கலந்து, அவர்கள் தன்னிலை மறந்ததும், அவர்களை வன்புணர்வது, அவர்களிடமிருக்கும் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துவருகின்றன.
இந்நிலையில், பிரான்சில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே அத்தகைய பயங்கர அனுபவத்தில் சிக்க இருந்த விடயம், பிரான்ஸ் அரசியலில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |