அழுகிய நிலையில் ஆயிரக்கணக்கான சடலங்கள்... பிரான்ஸ் பல்கலைக்கழக முன்னாள் தலைவர் மீது குற்றச்சாட்டு
பிரான்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆயிரக்கணக்கான சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக பல்கலைக்கழக முன்னாள் தலைவர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரீஸ் பல்கலைகழக தலைவரான Frederic Dardel மீது, பிணங்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு பாரீஸ் பல்கலைக்கழகத்திலுள்ள உடல் தான மையத்தில் உடல்கள் அழுக விடப்பட்டதாகவும், எலிகளால் சேதப்படுத்தப்பட்டதாகவும், தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் எழுந்த புகாரையடுத்து அந்த மையத்தை அரசு மூடியது.
அந்த மையத்தில் உடல்கள் நிர்வாணமாக, கூறுபோடப்பட்டு, கண்கள் திறந்த நிலையில் ஸ்ட்ரெச்சர்களின் மீது குவித்துவைக்கப்பட்டிருந்ததைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
அத்துடன், அந்த உடல்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், ஒரு கை அல்லது கால் 400 யூரோக்கள் வரையும், ஒரு முழு உடல் 900 யூரோக்கள் வரையும் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த பிரச்சினையில் பலர் சிக்கிய நிலையில், Frederic Dardel மட்டும் சிக்காமல்
தப்பி வந்தார்.
தற்போது, ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட்ட உடல்களை முறையாக பாதுகாத்து வைக்காமல்
விட்டதால், அவை அழுகியதைத் தொடர்ந்து, அவர் மீது உடல்களுக்கு ஊறு விளைவித்ததாக
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.