ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்திகரிக்கும் உணவுகள்
பொதுவாக ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வேலையை உடல் உறுப்புக்கள் செய்கிறது.
ஆனாலும் அதற்கு உதவும் வகையில் நாம் அடிக்கடி உணவுகளை எடுத்து கொள்வது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மனித உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்தால் ஆக்ஸிஜன், ஊட்டச்சத்து, ஹார்மோன்கள் ஆகியன சிறந்த முறையில் இயங்க வேண்டும். உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன், ஊட்டச்சத்து, ஹார்மோன்கள் ஆகியவற்றை செல்களுக்கு கொண்டு செல்வதில் ரத்தம் முக்கிய பங்காற்றுகிறது.
அத்துடன் உடலில் உள்ள நச்சுக்களையும் ரத்தம் வெளியேற்ற உதவுகிறது. ஒருவரின் ரத்தம் நச்சுக்களால் மாசடைந்து விட்டால் அவர் உடல் நலக்குறைபாடுகளுக்கு ஆளாகுவார்.
உதாரணமாக, உடல்சோர்வு, உடல் வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், சில ஊட்டச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ரத்த ஓட்டத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.
அந்த வகையில், ஆக்ஸிஜன், ஊட்டச்சத்து, ஹார்மோன்கள் ஆகிய மூன்றையும் முழு உடலுக்கும் கொண்டு செல்லும் ரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும் உணவுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகள்
1. நாம் உண்ணும் உணவில் அதிகமான கீரைகளை சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் இல்லாவிட்டாலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது மதிய உணவில் கீரைகள் இருக்க வேண்டும். ஏனெனின் கீரைகளில் இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை ரத்தத்தை சுத்தமாக்கி, மலச்சிக்கல் பிரச்சினைகளை தடுக்கிறது.
2. பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளன. இது ரத்தத்திலுள்ள நச்சுக்களை சுத்திகரிப்பு செய்கிறது. அத்துடன் பெட்டாலைன் எனப்படும் தனித்துவம் உள்ளது. சிலர் ரத்த அழுத்தம் நோயால் அவஸ்தைப்படுவார்கள். அவர்கள் பீட்ரூட் தொடர்ந்து எடுத்துக் கொள்வது சிறந்தது.
3. மாதுளைப்பழத்தில் வைட்டமிண்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ளன. இவை இயற்கையாகவே உடலுக்குள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் வேலையை செய்கிறது. அடிக்கடி மாதுளை ஜுஸ் குடிக்கும் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். ரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் மாசுக்கள் உடல் வீக்கத்தை உண்டாக்கும்.
4. சமையலறையில் முக்கிய பொருளாக இருக்கும் பூண்டில் இயற்கையாகவே நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது. அதே போன்று கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கலக்காமல் இருப்பதற்கும் உதவியும் செய்கிறது. பூண்டில் உள்ள ஆலிசின் எனும் மூலக்கூறு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது.
5. மஞ்சளில் குர்குமின் எனப்படும் மூலக்கூறு உள்ளன. அத்துடன் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் பண்புகளும் இருப்பதால் உடல் வீக்கம் பிரச்சினை வராது. மாறாக நச்சுக்களையும் மாசுக்களையும் வெளியேற்றும் வேலையை செய்கிறது. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் என்பதால் தொற்றுக்களும் நன்மை நெருங்காது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.