Frexit வேண்டும்: பிரான்ஸ் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
Frexit வேண்டும் என்று கோரி, பிரான்ஸ் எதிர்க்கட்சிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
Frexit வேண்டும்
உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எதிர்க்கட்சியான Patriot Party சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கட்சித் தலைவரான Florian Philippot தலைமையில் நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் Frexit வேண்டும் என்று குரல் எழுப்புவதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியது பிரெக்சிட் என அழைக்கப்படுகிறது. அதைப்போலவே, பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குரல் எழுப்பினார்கள்.
அத்துடன், நேட்டோ அமைப்பிலிருந்தும் பிரான்ஸ் வெளியேறவேண்டும் என்றும், ரஷ்யாவுக்கெதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |