மொறுமொறு தூத்துக்குடி பொரிச்ச பரோட்டா.., எப்படி செய்வது?
பரோட்டா என்பது பிரபல ஹொட்டல்களில் மட்டுமல்லாமல், ரோட்டுக்கடைகளிலும் பிரபலமான ஒரு உணவு ஆகும்.
பரோட்டாவிற்கு சிக்கன், மட்டன், சால்னா என அனைத்திற்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
அந்தவகையில், சுவையான பொரிச்ச பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 3 கப்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
- உப்பு- 1 ஸ்பூன்
- பால்- ¼ கப்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, சர்க்கரை, பால் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிணைந்துக்கொள்ளவும்.
பின் மாவை அகலான ஒரு இடத்தில் சேர்த்து 15 நிமிடம் நன்கு பிணைந்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து எண்ணெய் தடை 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
அடுத்து இதை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி அதன் மேல் எண்ணெய் தடவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
இதனையடுத்து இதை போல் அகலமாக திரட்டி பாராட்டோ போல் மடித்து தவாவியில் 2 நிமிடம் சுட்டு எடுக்கவும்.
இறுதியாக அடுப்பில் ஒரு வாணால் வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பரோட்டாவை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் தூத்துக்குடி பொரிச்ச பரோட்டா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |