ஜேர்மனியில் இன்று ஆட்சியமைக்கும் புதிய அரசு: ஜேர்மன் சேன்ஸலராகிறார் மெர்ஸ்
ஜேர்மனியில், இன்று புதிய அரசு ஆட்சியமைக்க உள்ளது.
தேர்தல் முடிந்தும் நீண்ட நாட்களாக பதவியேற்க காத்திருக்கும் பிரெட்ரிக் மெர்ஸ் இன்று ஜேர்மன் சேன்ஸலராக பதவியேற்க இருக்கிறார்.
ஜேர்மனியில் இன்று ஆட்சியமைக்கும் புதிய அரசு
ஜேர்மனியில் பிப்ரவரி மாதமே தேர்தல் முடிந்துவிட்டாலும், கூட்டணி பேச்சுவார்த்தைகள் முதலான சில காரணங்களால் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டுவந்தது.
இந்நிலையில், 208 இருக்கைகளை வென்ற CDU/CSU கட்சியும், 120 இருக்கைகளை வென்ற SPD கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.
ஆக, இன்று, அதாவது, மே மாதம் 6ஆம் திகதி, ஜேர்மனியில் புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.00 மணிக்கு ஜேர்மன் நாடாளுமன்றம் கூடுகிறது.
பிரெட்ரிக் மெர்ஸின் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், ஜனாதிபதி அதை உறுதி செய்ய, மெர்ஸ் ஜேர்மனியின் 10ஆவது சேன்ஸலராக பதவியேற்க இருக்கிறார்.