திரும்ப வந்துட்டோம்... ட்ரம்புக்கு ஜேர்மனியின் புதிய தலைவரின் செய்தி
திரும்ப வந்துட்டோம்னு சொல்லு என்னும் ரீதியில் ட்ரம்புக்கு செய்தி ஒன்றைச் சொல்லியுள்ளார் ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலர்.
கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்
ஜேர்மனியில் தேர்தல் முடிந்தும் இதுவரை புதிய அரசு கூட்டணி அமைக்கவில்லை.
ஜேர்மனியின் அடுத்த சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியும், சோஷுயல் டெமாக்ரட்ஸ் கட்சியும் ஆட்சி அமைப்பது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை எட்டியுள்ளது.
„Germany is back on track.“ (tm) pic.twitter.com/ytsIbckiEK
— Friedrich Merz (@_FriedrichMerz) April 9, 2025
ஆக, விரைவில் ஜேர்மனியில் புதிய அரசு அமைக்கப்பட இருக்கும் நிலையில், ட்ரம்புக்கு செய்தி ஒன்றைக் கூறியுள்ளார் மெர்ஸ். ட்ரம்புக்கான முக்கிய செய்தி, ஜேர்மனி மீண்டு(ம்) வந்துவிட்டது (Germany is back on track) என்பதாகும் என்று கூறியுள்ளார் மெர்ஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |