கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள்
கணவனின் உடலை துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் ஒன்றை நண்பர்கள் பரிசளித்துள்ளனர்.
பிளாஸ்டிக் டிரம் பரிசளிப்பு
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், மீரட் நகரைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவர் தனது மகனின் பிறந்த நாள் விழாவுக்காக லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது அவரது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்மில் சிமெண்டு கலவையுடன் கலந்தார்.
இச்சம்பவம் குறித்து உண்மை தெரிந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பிளாஸ்டிக் டிரம் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அமீர்பூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் பிளாஸ்டிக் டிரம் ஒன்றை பரிசளித்துள்ளனர்.
அப்போது நண்பர்களின் குறும்பு செயலை மணமக்கள் சிரித்தபடி ஏற்றுக் கொண்டனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |