ஹரியின் கோபம் போகவில்லை... நண்பர்கள் வட்டாரம் தகவல்
Harry still angry with other royals: இளவரசர் ஹரி இன்னமும் ராஜ குடும்பத்தில் சிலர் மீது கோபமாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ குடும்பத்திலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் வெளியேறி ஆறு ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த நிலையில், பிரித்தானிய மன்னரின் இளைய மகனான ஹரி, தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்.
ஹரியின் கோபம் போகவில்லை...
ஆனால், ஹரி இன்னமும் கோபமாகவே இருப்பதாக அவருடைய நண்பர் வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.

ஹரி மீண்டும் தன் குடும்பத்துடன் இணைவார், சமரசமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ராஜ குடும்ப உறுப்பினர்கள் மீதும், பக்கிங்காம் அரண்மனை அலுவலர்கள் மீதும் கோபமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் தன் தந்தையுடன் சமரசம் ஆவதை கெடுக்கும் வகையில் தன் தந்தையைச் சுற்றி இருக்கும் அதிகாரிகள் சிலர் செயல்பட்டுவருவதாக ஹரி ஏற்கனவே சாடியிருந்தார்.
இந்நிலையில், ராஜ குடும்ப உறுப்பினர்களும், பக்கிங்காம் அரண்மனை அலுவலர்களும் தன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஹரி எதிர்பார்ப்பதாக அவரது நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |