தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! நெருங்கிய நண்பர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து நெருங்கிய நட்பு வட்டாரங்கள் சில அதிர்ச்சிகர தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே மிக பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்கள், இவர்களின் விவாகரத்து முடிவு குறித்து பேசியுள்ளனர். அதாவது இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு கிடையாது.
6 மாதமாகவே இருவருக்கும் இடையில் விவாகரத்து குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்படுகின்றது. அதன் பிறகு தான் இருவரும் ஒருமனதாக விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இது நாள் வரை தங்களது பிள்ளைகள் வளரட்டும் என காத்திருந்தார்கள்.
இவர்களின் விவாகரத்து உங்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியான தகவலாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறியுள்ளனர். தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் இணைவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தற்போது இருவரும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர். தனுஷ் வாத்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க ஹைதராபாத் வந்துள்ளார். அதேபோல் ஐஸ்வர்யா தன்னுடைய காதல் பாடலை படமாக்க தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.