உங்களுக்கு Friends இருக்காங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்
நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து உயிர்களுமே ஏதோ ஒரு வகையில் இரத்த பந்தத்துடன் இணைந்தது.
அது தாயாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, உடன் பிறப்புக்களாக இருந்தாலும் சரி அல்லது பிற உறவுகளாக இருந்தாலும் சரி ஏதோ ஒரு வகையில் பிணைக்கப்பட்டதாகவே இருக்கும்.
image - India Today
ஆனால், எந்தவித தொடர்பும் இல்லாமல் வெறும் உணர்வுகளால் மாத்திரமே இணையும் ஒரு பந்தம் என்றால் அது நட்பு ஒன்று மாத்திரமே.
நண்பன் ஒருவன் கிடைத்துவிட்டால், விண்ணைத் தொடலாம் மண்ணைத் தொடலாம் என்று பல பேர் கூறக் கேட்டிருப்போம். உண்மையில் அதுதான் நிதர்சனமான உண்மை.
image - Success Consciousness
நட்புக்குள் மாத்திரமே நாம் நாமாக இருக்க முடியும். நண்பர்களிடம் மாத்திரமே நமது சுக, துக்கங்களை முழுமையாக பகிர்ந்துகொள்ள முடியும்.
ஏனென்றால் நம் நிலையிலிருந்து நம்மை புரிந்துகொள்ளும் ஒரு ஜீவன் என்றால் அது நண்பன் அல்லது நண்பி தான். நட்பு எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.
அது பள்ளிப்பருவ நட்பாக இருக்கலாம், அல்லது பல்கலைக்கழக நட்பாக இருக்கலாம் அதுவும் இல்லையென்றால் பணியிடத்தில் தொடங்கிய நட்பாக இருக்கலாம். பெரும்பாலுமே திடீரென்று நண்பர்களாக ஆனவர்கள்தான் அதிகம்.
திடீர் நட்புக்கு ஆயுள் குறைவு என்பார்கள். ஆனால், அந்த நட்பையும் தனது வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
image - Linkedin
மனம் சோர்வாக இருக்கும்போதும் சரி சந்தோஷமாக இருக்கும்போதும் சரி முதலாவதாக மனம் தேடும் ஒரு சொந்தம் என்றால் அது நட்பைத் தான். உண்மையில் கூறப்போனால், நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒவ்வொருவருக்கும் வரம்.
நட்பில் மாத்திரம்தான் ஜாதி,மதம், குலம், கோத்திரம் என்று எதுவும் கிடையாது. நாம் எப்படியிருக்கின்றோமோ அப்படியே நம்மை ஏற்றுக்கொள்ளும் ஒரு உறவு.
உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள உன் நண்பன் யாரென்று தெரிந்தாலே போதும் என்று கூறும் வழக்கமும் உண்டு. ஏனென்றால் நமது நட்பு வட்டம் நமது பிரதிபலிப்பாக இருக்கின்றது.
image - Tiny Rituals
உலகில் அனைத்து விடயங்களுக்கும் வகைகள் இருப்பதைப் போல் நட்புக்கும் உண்டு. நட்பையும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதாவது, தலை நட்பு, இடை நட்பு, கடை நட்பு. இதில் தலை நட்பு என்று கூறினால், மனதாலும் செயலாலும் ஏற்படும் நட்பு.
மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் நல்லவராக நடந்துகொள்வது இடை நட்பு. அதேபோல் கடை நட்பு என்பது தனது நண்பனுக்கோ, அல்லது நண்பிக்கோ தீயவற்றை செய்யத் தூண்டுவது. இவ்வாறு நட்பின் வகைகள் அமைந்திருக்கின்றன.
ஒரு நண்பன் தீய வழியில் செல்லும்போது நமக்கென்ன? என்று இருக்காமல் அவனை எப்படியாவது நல்வழிப்படுத்த வேண்டும் என்று நினைப்பவனே உண்மையான நண்பனுக்கு உதாரணம். ஏனென்றால் அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம்.
image - Thought Catalog
நாம் துன்பத்தில் வாடும்பொழுது எந்த உறவு நம்முடன் இருக்கின்றதோ இல்லையோ நட்பு நிச்சயமாக இருக்கும். காரணம் எதுவித எதிர்பார்ப்பும் இல்லாததே நட்பு.
எனவே மாதா, பிதா, குரு,தெய்வம் இந்த வரிசையில் நட்பை சேர்த்துக் கொள்வதிலும் தவறில்லை. நட்பை போற்றுவோம்... நட்புக்கு மரியாதை செலுத்துவோம்...!