தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்: தட்டில் இருந்த உயிரினத்தைக் கண்டு அலறியடித்து ஓட்டம்
பிரித்தானியாவில், தேநீருடன் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது என முடிவு செய்தது அந்தக் குடும்பம்.
குடும்பத் தலைவியான Michelle Adcock (45), சாலட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தற்செயலாக தனது சாப்பாட்டுத் தட்டைப் பார்க்க, அதிலிருந்து அவரையே முறைத்துக்கொண்டிருந்திருக்கிறது ஒரு தவளை.
தவளையைப் பார்த்து Michelle அலறியடித்துக்கொண்டு ஓட, Michelleஐப் பார்த்து தவளை துள்ளிக் குதித்து, அவர் மயோனேஸ் வைத்திருந்த பாத்திரத்தில் குதித்து, பின் சோபாவில் குதித்து தன் காலடித்தடங்களை விட்டுச் செல்ல, Michelleஇன் கணவரான Martin (49)ம் அவரது மகனான Max (12)ம் துள்ளிக்குதித்த தவளையை பிடித்து பெட்டி ஒன்றுக்குள் அடைத்தனர்.
கடைக்கு போன் செய்த Michelle, உங்கள் பொருள் ஒன்று தவறுதலாக எங்களிடம்
வந்துவிட்டது, வந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூற, அவர்கள் வந்து
பார்க்கும்போதுதான், அவர்களுக்கு பிரச்சினை புரிந்துள்ளது.
Michelle வீட்டாரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, 75 பவுண்டுகளையும் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் கடை ஊழியர்கள். இப்போது என்ன சாப்பிட்டாலும், தட்டிலிருந்து கண்ணை எடுக்காமலே சாப்பிடுகிறார் Michelle...