கனடாவை உலுக்கிய சம்பவம்! பனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வெளியானது
அமெரிக்காவுக்குச் செல்லும் கனவில், கனடா எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை, கனடா அமெரிக்க எல்லையில் நான்கு உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் உயிரிழந்தவர்கள் இந்தியாவிலுள்ள குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவர, அந்த பரபரப்பு இந்தியாவையும் தொற்றிக்கொண்டது.
தற்போது, உயிரிழந்தவர்கள் குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
உயிரிழந்தவர்கள், குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் ஆவர்.
இதில் சோகமான விடயம் என்னவென்றால், இந்தக் குடும்பம் வறுமையில் வாடி, அதனால் அமெரிக்காவுக்குச் சென்று நல்ல வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொள்ளலாம் என்பதற்காக புறப்பட்ட குடும்பம் இல்லையாம். ஜகதீஷ் கௌரவமான பள்ளி ஒன்றில் பணியாற்றும் நல்ல வருவாய் கொண்ட ஆசிரியராம்.
சுமார் 65 இலட்ச ரூபாய் ஏஜண்டுகளுக்குக் கொடுத்து எப்படியாவது அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளது ஜகதீஷ் குடும்பம்.
அத்துடன், ஜகதீஷ் குடும்பம் மட்டுமின்றி, Dingucha கிராமத்திலிருந்து வேறு பலரும், அமெரிக்கா செல்வதற்காக, கனடா சென்று, அங்கிருந்து எல்லையைக் கடந்து நடந்தே அமெரிக்காவுக்கு புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் என்ன ஆனார்கள் என்பதும் இதுவரை தெரியவரவில்லை.
ஜகதீஷ் குடும்பத்திலுள்ள, Dingucha கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்களாம். அமெரிக்காவில் செட்டில் ஆவது, ஒரு தன்மானப் பிரச்சினையாக அக்கிராமத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது. அதாவது, குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்காவில் செட்டில் ஆகவில்லை என்றால், அது குடும்பத்துக்கு அவமானம் என அக்கிராமத்தினர் கருதுகிறார்களாம்.
ஆகவேதான், எப்படியாவது அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிடுவது என புறப்பட்டிருக்கிறது ஜகதீஷ் குடும்பம். ஆனால், அமெரிக்காவில் செட்டில் ஆவதற்கு பதிலாக கனடா அமெரிக்க எல்லையிலேயே அவர்கள் குடும்பமாக உயிர் பிரிந்துள்ளது உண்மையாகவே பரிதாபமான விடயம்தான்!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022