கனடாவில் பழங்கள், நொறுக்குத்தீனிகள், குளிர் பானங்களைத் தொடர்ந்து தேங்காயில் கிருமிகள்
பிரித்தானியாவில் சாண்ட்விச்சில் இருந்த கிருமிகளால் 275 பாதிக்கப்பட்டதும், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததும் நினைவிருக்கலாம்.
கனடாவில், கிர்ணி பழம் மற்றும் நொறுக்குத்தீனிகளில் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், சில குளிர் பானங்களில், லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமிகள் குறித்து செய்திகள் வெளியாகின.
சமீபத்தில், கனடாவில் பானம் ஒன்றில் லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த பானத்தை அருந்திய 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 2 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
கனேடிய மாகாணமொன்றில் தேங்காயில் கிருமிகள்
இந்நிலையில், கனடாவின் கியூபெக் மாகாணத்தில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட தேங்காயிலும் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துருவி, உறையவைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும் தேங்காயில் சால்மோனெல்லா என்னும் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
Yen Ocean Swallow என்னும் பிராண்ட் பெயர் கொண்ட, துருவி உறையவைக்கப்பட்டுள்ள 400 கிராம் பாக்கெட்களாக விற்கப்படும் lot code F2-23 11358 மற்றும் 2025, அக்டோபர் 1 காலாவதி திகதி கொண்ட தேங்காய்தான் திரும்பப் பெறப்படுகிறது.
இந்த தேங்காயை வாங்கியோர் அவற்றை பயன்படுத்தாமல் தூக்கி எறிந்துவிடவோ அல்லது, வாங்கிய கடையிலேயே திருப்பிக் கொடுத்துவிடவோ செய்யுமாறு உணவு பாதுகாப்பு ஏஜன்சி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |