முடக்கப்பட்ட ரூ177 கோடி சம்பளம்... போராடி வாங்கிய ரொனால்டோ
ஜுவென்டஸ் அணியுடனான முடக்கப்பட்ட சம்பளம் தொடர்பாக சட்டப்பூர்வ போராட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றி பெற்றுள்ளார்.
ஜுவென்டஸ் அணி நிர்வாகம்
போர்த்துகீசிய கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோ கொரோனா நாட்களின் போது சம்பள ஏற்பாடுகள் தொடர்பாக இத்தாலிய அணியான ஜுவென்டஸ் உடன் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த ஜுவென்டஸ் அணி நிர்வாகம் ரொனால்டோ மற்றும் பிற வீரர்களுடன் ஒப்பந்தம் செய்து, இதுவரை பெறாத ஊதியத்தை ஒத்திவைத்தனர்.
ஆனால் இந்த விவகாரத்தை இத்தாலிய கால்பந்து நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில் ஒரு நடுவர் மன்றம் தொடர்புடைய விவகாரத்தை கண்டுபிடித்ததை அடுத்து, ரொனால்டோ சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நேர்ந்தது.
ரொனால்டோ உட்பட
மொத்தம் 17 மில்லியன் பவுண்டுகள் (ரூ 177 கோடி) ரொனால்டோ உட்பட பல வீரர்களுக்கு அளிக்கப்படாமல் முடக்கப்பட்டிருந்தது. தற்போது சுமார் 8.3 மில்லியன் பவுண்டுகள் தொகை மற்றும் வட்டியை ரொனால்டோ பெற்றுள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச்சந்தையில் களமிறங்கிய ஜுவென்டஸ் அணி 2022 மற்றும் 2023ல் சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் தொகையை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |