சருமம் பளபளக்க உதவும் Fruit Facial.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
பழங்களில் இயற்கையாகவே சருமத்தை பிரகாசமாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
அழகு நிலையங்களுக்கு சென்று ரசாயனம் கலந்து பேஷியல் செய்வதற்கு பதிலாக வீட்டிலேயே இந்த Fruit Facial செய்து முகத்தை பிரகாசமாக்கலாம்.
இயற்கைக்கான இந்த Fruit Facial-ஐ வீட்டிலேயே எப்படி எளிதாக செய்யலாம்.
எப்படி தயாரிப்பது?
ஆரஞ்சு- ஆரஞ்சு பழத்தை மசித்து அதில் 1 ஸ்பூன் மஞ்சள், 1 ஸ்பூன் தேன் சேர்த்து, நன்கு கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் வைத்திருந்து, பின் சுத்தம் செய்யவும்.
வாழைப்பழம்- வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து, பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் விட்டு, கழுவவும்.
பப்பாளி- பழுத்த பப்பாளியை மசித்து அதில் துருவிய முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின் கழுவவும்.
கிவி மற்றும் அவகேடோ- ஒரு அவகேடோ மற்றும் கிவியை மசித்து கிரீமி அதை முகத்தில் அரை மணி நேரம் தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
ஸ்டார்பெர்ரி- ஸ்ட்ராபெர்ரிகளை மசித்து அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
தர்பூசணி- தர்பூசணியை எடுத்து மசித்து அதில் 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவவும்.
இதன் நன்மைகள்
- சருமத்தை ஊட்டமளிக்கிறது.
- கறைகள் மற்றும் நிறமிகளை குறைக்கிறது.
- சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
- ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.
- இறந்த சரும செல்களை நீக்குகிறது.
- சருமத்தை சுத்தம் செய்கிறது.
- பளபளப்பான பொலிவான சருமத்தை அளிக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் சருமத்தை, உங்களின் விருப்பமான பேஷ்வாஷ் கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.
பின் செய்து வைத்துள்ள Fruit Facial போட்டு முகத்தை கழுவ வேண்டும்.
அடுத்து சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உங்களின் விருப்பமான மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க, சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |