மாதவிடாய் வலிகளை தீர்க்க வேண்டுமா? அப்போ இந்த சத்தான ஜூஸ்களை குடிங்க

Apple Cucumber Orange Pine Apple Menstruation
By Yashini Aug 23, 2023 01:43 PM GMT
Report

மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு வலியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். அது இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் சுழற்சி இதை நம்மால் தடுக்க முடியாது.

ஆனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

மாதவிடாயின் போது இடுப்பு, தொடை, மார்பு பகுதி என உடலின் பல்வேறு இடங்களில் வலி ஏற்படும். அதேபோல அடிவயிற்றுப் பகுதியில் பிடிப்புகளும் அதிகமாக இருக்கும்.

menstration/மாதவிடாய்

இந்த நேரத்தில் நிறைய பேர் சாப்பிடவே மாட்டார்கள். அது மிகவும் தவறானது. அதேபோல நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், பழச்சாறுகள் உள்ளிட்ட திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாதவிடாய் காலத்தின்போது வலியைக் குறைக்க எடுத்துக் கொள்ள வேண்டிய சில ஜூஸ் வகைகளை பற்றி பார்க்கலாம்.

பைனாப்பிள்-கேரட் ஜூஸ்

மாதவிடாய் சமயத்தில் உதிரப்போக்கு சீராக இல்லாத போதுதான் அதிகமாக வலி இருக்கும். அதை சீர்படுத்த பைனாப்பிள் உதவி செய்யும்.

பைனாப்பிளில் உள்ள ப்ரோமெலனின் என்னும் என்சைம் அடிவயிற்றில் ஏற்படும் தசைப் பிடிப்புகளைக் குறைக்கிறது. கேரட்டும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியையும் அசௌகரியத்தையும் குறைக்கிறது.

pineapple carrot juice/பைனாப்பிள்-கேரட் ஜூஸ்

பைனாப்பிள் மற்றும் கேரட்டை தண்ணீர் ஊற்றி அரைத்தால் பைனாப்பிள்-கேரட் ஜூஸ் ரெடி.அதனை வடிகட்டி குடிக்கவேண்டும்.

ஆப்பிள், பீட்ரூட், வெள்ளரிக்காய் ஜூஸ்

மாதவிடாய் சமயத்தில் அசௌகரியமும் சோம்பலும் இருக்கும். இதை சரிசெய்யவும் வலியைக் குறைக்கவும் இந்த பீட்ரூட், வெள்ளரிக்காய் ஜூஸ் உதவி செய்யும்.

பீட்ரூட், செலரி, வெள்ளரிக்காய், ஆப்பிள் ஆகிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸ் உடலுக்குப் போதிய அளவு சக்தி கொடுக்கிறது. ​

apple beetroot cucumber juice/ஆப்பிள், பீட்ரூட், வெள்ளரிக்காய் ஜூஸ்


ஆப்பிள், பீட்ரூட், வெள்ளரிக்காய், 2 துண்டு செலரி சேர்த்து அரைத்தால் ​ஆப்பிள், பீட்ரூட், வெள்ளரிக்காய் ஜூஸ் ரெடி.இதனை வடிகட்டாமலேயே குடிக்கலாம்.

கேரட், ஆப்பிள் லெமன் ஜூஸ்

கேரட் மற்றும் ஆப்பிள் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். அதேபோல எலுமிச்சை சாறு உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். ஆப்பிள், கேரட் மற்றும் எலுமிச்சை ஆகியவை சேர்ந்து தினசரி தேவையில் 25 சதவீதம் பொட்டாசியத்தை இது நமக்கு வழங்குகிறது.

இந்த ஜூஸ் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் மனநிலை மாற்றத்தையும் சரிசெய்து புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. ​

carrot apple lemon juice/கேரட், ஆப்பிள் லெமன் ஜூஸ்

கேரட், ஆப்பிள், ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு, ஒரு கைப்பிடி அளவு பார்சிலி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி அரைத்தால் ​கேரட், ஆப்பிள் லெமன் ஜூஸ் ரெடி. இதனை வடிகட்டி குடிக்கலாம்.

பீச் மற்றும் லெமன் ஜூஸ்

மாதவிடாய் சமயத்தில் வயிறு கொஞ்சம் பெரிதாகவும் வயிறு உப்பசமாகவும் இருக்கும். இதை சரிசெய்ய இந்த பீச் பழச்சாறு உதவி செய்யும்.

உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற, அதிகப்படியான நீரை வெளியேற்றும் தன்மை இந்த ஜூஸிற்கு உண்டு. தசைகளுக்கும் வலிமையைக் கொடுக்கும்.

peach lemon juice/பீச் மற்றும் லெமன் ஜூஸ்

பீச் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்தால் ​பீச் மற்றும் லெமன் ஜூஸ் ரெடி.இதனை அப்படியே குடிக்கலாம்.

ப்ளூபெர்ரி - வாட்டர்மெலன் ஜூஸ்

ப்ளூபெர்ரி மற்றும் வாட்டர்மெலன் இரண்டுமே மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அடிவயிற்றுப் பிடிப்புகளைச் சரிசெய்ய உதவி செய்யும். ப்ளூபெர்ரியில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

அதேபோல இதிலுள்ள வாட்டர்மெலன் உடலில் உள்ள அதிகப்படியான தேவையற்ற நீரை வெளியேற்றச் செய்யும். ​

blueberry watermelon juice/ப்ளூபெர்ரி வாட்டர்மெலன் ஜூஸ்

ப்ளூபெர்ரி மற்றும் வாட்டர்மெலானை சேர்த்து நன்கு அரைத்து குடிக்கலாம்.வாட்டர்மெலோனில் தண்ணீர் இருப்பதால் இதில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

ஆப்பிள் - ஆரஞ்சு ஜூஸ்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஆற்றல் இழப்பையும் வயிறு உபாசத்தையும் சரிசெய்ய இந்த ஆப்பிள் ஆரஞ்சு ஜூஸ் உதவியாக இருக்கும்.

இதில் சேர்க்கப்படும் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு இரண்டுமே மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்க உதவி செய்யும். ​

apple orange juice/ஆப்பிள் - ஆரஞ்சு ஜூஸ்

ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழத்தை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்தால் ​ஆப்பிள் - ஆரஞ்சு ஜூஸ் ரெடி.இதனை அப்படியே குடிக்கலாம்.

பீட்ரூட் - ஆரஞ்சு ஜூஸ்

இந்த ஜூஸ் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கை சீர்செய்வதோடு உடலில் ஏற்படும் அதிகப்படியான சோர்வு ஆகியவற்றைப் போக்க உதவி செய்யும்.

குறிப்பாக மாதவிடாய் சமயத்தில் ஏற்படுகிற மன ரீதியான பிரச்சினைகள் மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்டவற்றைக் குறைக்க உதவி செய்யும்.

beetroot orange juice/பீட்ரூட் - ஆரஞ்சு ஜூஸ்

பீட்ரூட் மற்றும் ஆரஞ்சு பழத்தை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்தால் பீட்ரூட் - ஆரஞ்சு ஜூஸ் ரெடி.இதனை வடிகட்டி குடிக்கலாம்.

​ஆப்பிள், செலரி, இஞ்சி ஜூஸ்

இதில் கருவளத்தை மேம்படுத்தக்கூடிய மினரல்கள் அதிகமாக இருக்கின்றன. அதோடு இந்த எல்லா பொருள்களிலுமே கால்சியம் அதிக அளவில் இருக்கின்றன.

இது இனப்பெருக்க மண்டலத்தையும் உடல் திசுக்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுப் பிடிப்புகளையும் இது குறைக்கும். 

Apple, celery, ginger juice/ஆப்பிள், செலரி, இஞ்சி ஜூஸ்   

ஆப்பிள்,2 துண்டு செலரி,தோல் சீவிய இஞ்சி,கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்தால் ஜூஸ் ரெடி.நார்சத்து முழுமையாக கிடைக்க அப்படியே கிடைக்கலாம் அல்லது வடிகட்டியும் குடிக்கலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

  

மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US