இரவில் மறந்தும் கூட இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்! ஏன் தெரியுமா?
பொதுவாக பழங்கள் எல்லாவற்றிலும் எதாவது ஒரு நன்மைகள் மற்றும் சத்துக்கள் இருக்கும். அதே நேரம் சில பழங்களை இரவில் எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு தீங்கினை விளைவிக்கும்.
வாழைப்பழம்
இரவு வாழைப்பழம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் உடலின் வெப்ப நிலையை அதிகரித்து தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஆப்பிள்
ஆப்பிள் சாப்பிடுவதில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் இரவில் இந்த பழத்தை எடுத்துக்கொள்ளும் போது வாயு பிரச்சனையை உண்டாக்கும்.
healthline
தர்பூசணி
தர்பூசணி மற்றும் நீர் சத்து நிறைந்துள்ள பழங்களை இரவில் சாப்பிடாதீர்கள். இந்த பழங்களை இரவு தூங்குவதற்கு முன் சாப்பிடுவதனால் சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டியிருக்கும். இதன் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம்.
முக்கிய குறிப்பு
இரவு நேரங்களில் பழங்களை எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதனால் தான் இரவில் பழங்களை சாப்பிட கூடாது என்று சொல்கின்றனர்.
agencies/economictimes