முகப்பொலிவை அதிகரிக்க உதவும் 5 பழங்கள்.., என்னென்ன தெரியுமா?
Fruits that can give glowing and healthy skin- பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
சருமத்தின் ஆரோக்கியத்திற்கு வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக, சருமத்திற்கு உறுதியை அளிக்கும் கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் தேவைப்படுகின்றன.

வயது அதிகரிக்கும்போது உடலில் கொலாஜன் உற்பத்தி இயற்கையாகவே குறையத் தொடங்கும்.
எனவே வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு உதவும்.
அந்தவகையில், முகப்பொலிவை அதிகரிக்க உதவும் 5 பழங்கள் குறித்து பார்க்கலாம்.
என்னென்ன பழங்கள்?
கொய்யாப்பழம்- கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன.
கிவி- கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் செல்களை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
ஆரஞ்சு- ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு முக்கியமானது.
ஸ்ட்ராபெர்ரி- ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
பப்பாளி- பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை கொலாஜன் உற்பத்திக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |