உக்ரைனின் குண்டு சதித்திட்டம் தொடர்பில் ஜேர்மனி பெண் கைது
உக்ரைனின் குண்டு சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், ஜேர்மன் பெண்ணொருவரை FSB கைது செய்தது.
சதித்திட்டம்
தெற்கு ஸ்டாவ்ரோபோல் பகுதியில் உள்ள ஒரு சட்ட அமலாக்கக் கட்டிடத்தை வெடிவைத்துத் தகர்க்க உக்ரைன் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக ஜேர்மன் பெண்ணொருவர், தனது பையில் கையால் செய்யப்பட்ட குண்டுடன் வைத்திருந்தாக கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை இந்த நடவடிக்கை குறித்து திங்களன்று தெரிவித்தது.
மேலும், குறித்த பெண் 1969யில் பிறந்தவர் என்று மட்டும் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறியது.

ஜேர்மனியிடம் பதில் இல்லை
அத்துடன் உக்ரேனிய பாதுகாப்பு சேவைகளுக்காகப் பணிபுரிந்து வந்த ஒருவரால் அவர் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
FSB-யின்படி, அந்தக் குண்டு தொலைவில் இருந்து வெடிக்கச் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. அது அந்தப் பெண்ணைக் கொன்றிருக்கும்.
அந்தக் குண்டு வெடிப்பதைத் தடுக்க சட்ட அமலாக்கத் துறையினர் மின்னணு ஜாமிங் முறையைப் பயன்படுத்தியதாக அது கூறியது.
ரஷ்யாவின் இந்த கூற்றுகளுக்கு உக்ரைன் அல்லது ஜேர்மனியிடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |