ஈரான் போர்: ஜேர்மனியிலும் எரிபொருள் விலைகள் உயர்ந்தன
ஈரான் போரின் தாக்கம் வெளிப்படையாகத் தெரியத் துவங்கிவிட்டது.
ஏற்கனவே பிரித்தானியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ஜேர்மனியிலும் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.
ஜேர்மனியிலும் எரிபொருள் விலை உயர்வு
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியால், எண்ணெய் தயாரிப்பு மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்து விடயத்தில் பிரச்சினை உருவாகியுள்ளது.

ஆகவே, சில நாடுகளில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதாக செய்திகள் வரத்துவங்கியுள்ளன.
குறிப்பாக உலகின் மொத்த எண்ணெயில் 20 சதவிகிதம் ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக கொண்டுவரப்படும் நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், எரிபொருட்களுக்கு பிரச்சினை உருவாகத் துவங்கியுள்ளது.
ஜேர்மனியைப் பொருத்தவரை, டீசல் விலை லிற்றர் ஒன்றிற்கு 2 யூரோக்களைத் தாண்டிவிட்டது.
பெட்ரோல் விலையும் ஐந்தில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. போர்ச்சூழல் நீடிக்கும் நிலையில், இந்த நிலைமை மேலும் மோசமாகலாம் என அஞ்சப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |