ரஷ்ய படையெடுப்பின் எதிரொலி... பிரித்தானியாவில் புதிய உச்சம் தொட்ட எரிபொருள்
உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலியால் பிரித்தானியாவில் எரிபொருள் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலக எண்ணெய் விலையில் புதிய அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில் பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
Experian Catalist வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, பிரித்தானியாவில் மார்ச் 20ம் திகதி நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 167p, ஒரு லிட்டர் டீசல் 179p ஆக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 18p மற்றும் டீசல் 26p அதிகரித்துள்ளது.
மொத்தவிற்பனை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மார்ச் 9 அன்று வியத்தகு முறையில் குறையத் தொடங்கின, ஆனால் இன்னும் 10 நாட்களுக்கும் மேலாக பம்ப்களில் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொடும் என AA செய்தித்தொடர்பாளர் Luke Bosdet தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எரிபொருள் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் போராடி வருவதால், பிரித்தானியா நிதியமைச்சர் ரிஷி சுனக், எரிபொருள் கட்டணத்தை குறைக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.