இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள்
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையில் மாற்றம்
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் படி, இலங்கையில் இன்று(05/01/26) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது,
புதிய விலைகளின் படி, ரூ335 ஆக இருந்த ஒரு லிட்டர் ஓக்டேன் 95 ரக பெட்ரோல் விலை ரூ.5 அதிகரித்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
அதே நேரத்தில் ஓட்டோ டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.2 அதிகரித்து புதிய விலையாக ரூ.279 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.5 அதிகரித்து புதிய விலையாக ரூ.323 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ரூ. 2 அதிகரித்து ரூ.182க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
சாதாரண ஓக்டேன் 95 ரக பெட்ரோலில் எந்தவொரு விலை மாற்றமும் செய்யப்படாமல் ரூ.294 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |