சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு
Fuel prices rise again in Switzerland: சுவிட்சர்லாந்தில் மீண்டும் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் எரிபொருள் விலைகள் உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.
எரிபொருள் விலை மீண்டும் உயர்வு
சுவிட்சர்லாந்தில் செப்டம்பர் மாதத்தில் எரிபொருள் விலைகள் கணிசமான அளவில் உயர்ந்தன. இந்நிலையில், தற்போது மீண்டும் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.

கடந்த வாரத்தை ஒப்பிடும்போது, Unleaded 95 வகை பெட்ரோல், லிற்றர் ஒன்றிற்கு 2.4 சதவிகிதம் அதிகரித்து 2.16 சுவிஸ் ஃப்ராங்குகளாகியுள்ளது. Unleaded 98 வகை பெட்ரோல், 2.27 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர்ந்துள்ளது.
அதேபோல, டீசல் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. டீசல் விலை 2.1 சதவிகிதம் அதிகரித்து, லிற்றருக்கு 2.45 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
போர் முதலான விடயங்கள் சர்வதேச எரிபொருள் சந்தையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இப்படி பொதுமக்களை பாதிக்கும் வகையில் எரிபொருள் விலையில் உயர்வை ஏற்படுத்திவருகிறது.
இதற்கிடையில், ரைன் நதியில் நீர் மட்டம் குறைந்ததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட, அதுவும் எரிபொருள் விலை மீது பாதிப்பை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.