சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் வாகன எரிபொருள் விலைகள்
சுவிட்சர்லாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துவருகின்றன.
வாகன எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில், பெட்ரோல் விலை ஒரு வாரத்துக்குள் 1.82 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 1.87 சுவிஸ் ஃப்ராங்குகளாக அதிகரித்துள்ளது.

டீசல் விலை பெட்ரோலைவிட அதிக அளவில் விலை அதிகரித்துள்ளது. ஆம், டீசல் விலை 9 செண்ட்கள் அதிகரித்து 2.19 சுவிஸ் ஃப்ராங்குகளாக உள்ளது.
உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து, இதுவரை பெட்ரோல் விலை 20 செண்ட்களும் டீசல் விலை 40 செண்ட்களும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது ஈரான் போரைத் தொடர்ந்து வாகன எரிபொருள் விலை மேலும் அதிகரித்துள்ளது.
என்றாலும், இப்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என தேசிய பொருளாதார விநியோக ஃபெடரல் அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |