ரூ 58,000 கோடி நிதி இழப்பு! நீரவ் மோடி உட்பட 15 இந்திய பொருளாதார குற்றவாளிகள்..பட்டியல் வெளியீடு
இந்தியாவில் இருந்து தப்பியோடிய 15 பொருளாதார குற்றவாளிகளால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கிகளுக்கு நிதி இழப்பு
தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர். 
இவர்களின் மூலம் ரூ.58,000 கோடிக்கும் அதிகமான நிதி இழப்பு வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, திங்களன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரங்களை வழங்கினார்.
மேலும், இந்த 15 நபர்களையும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018யின் கீழ் FEOகளாக மத்திய அரசு அறிவித்ததாகவும் தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |