முழு சார்ஜில் 110 km செல்லலாம்! புது மொடல் Electric scooter -ன் விலை பற்றிய விவரங்கள்
ஃபுஜியமா இவி (Fujiyama EV) நிறுவனம் இந்தியாவில் கிளாசிக் (Classic) எனும் புதுமுக Electric Two-Wheeler மொடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘Classic’ electric scooter
Fujiyama EV நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கிளாசிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் (Classic electric scooter) Powerful Electric Motor பொருத்தப்பட்டுள்ளது.
இந்த மோட்டாரே நகர்ப்புற பயன்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிகவும் வேகமாக சார்ஜ் ஆகும் வசதி வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றின்படி, Classic electric scooter-யை வெறும் 4 மணி நேரத்திலேயே முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
மேலும் இதில், Twin-barrel வகை LED light set-up இருப்பதால் முன்பக்கம் மட்டுமன்றி பக்கவாட்டு பகுதியையும் தெளிவாகக் காணும் வகையில் வெளிச்சத்தை வீசும் திறன் உடையது.
இதனால், இரவு நேரத்தில் பாதுகாப்பான பயணத்தை பெறலாம். அதோடு, Combi drum brake வசதி உள்ளது.
அதுமட்டுமல்லாமல், 3000 Watt திறன் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் இயங்க உதவியாக உள்ளது.
குறிப்பாக ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக, 2.05 kWh திறன் கொண்ட Lithium Iron Phosphate வகை Battery pack உள்ளது.
Fujiyama Classic electric scooter விலையானது ரூ. 79,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த லெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளையும் ஃபுஜியமா இந்தியாவில் தொடங்கியுள்ளது.