குறைந்த வேகத்தில் செல்லும் Electric Scooter அறிமுகம்! மொடல் மற்றும் விலை விவரங்கள்
ஃபுஜியமா (Fujiyama), மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த தண்டர் பிளஸ் (Thunder Plus) Electric Scooter பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Thunder Plus electric scooter
Thunder Plus electric scooter விலை ரூ. 64,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது சந்தையில் தண்டர் விஎல்ஆர்ஏ (Thunder VLRA) மற்றும் தண்டர் எல்ஐ (Thunder LI) என்ற இரண்டு Variant -களில் கிடைக்கிறது.
இதில் தண்டர் விஎல்ஆர்ஏ (Thunder VLRA) குறைந்த வேகத்தில் செல்லும். இதன் Top speed மணிக்கு 25km ஆகும். இதில், 250 WATT மோட்டார் உள்ளது.
மேலும் ஒரு முழு சார்ஜில் 60 கிமீ தூரம் வரை செல்லலாம். மேலும், 48V 28AH VRLA battery பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக குறைந்த வேகத்தில் செல்வதால் பதிவெண்ணோ அல்லது ஓட்டுநர் உரிமமோ தேவைப்படாது.
அதேபோல தண்டர் எல்ஐ (Thunder LI) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் குறைந்த வேகத்திலேயே செல்லும். இதிலும், 250 WATT மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் Top speed மணிக்கு 25km ஆகும்.
மேலும் ஒரு முழு சார்ஜில் 90 கிமீ தூரம் வரை செல்லலாம். இதில் 60V 30AH VRLA battery பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்களே போதும் என கூறப்படுகின்றது. முக்கியமாக இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியண்டுகளிலும் அதிக தொழில்நுட்ப வசதிகள் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |