பிரான்சில் இந்த நகரில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு! சுகாதார அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரான்சில் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட நாளில் முழு ஊரடங்கு என்ற சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிரான்சில் பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் படி நாட்டில் குறிப்பிட்ட நகரில் சில கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இந்நிலையில், சுகாதார அமைச்சர் Olivier Véran இன்று Dunkerque நகருக்கு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போடப்படுவதாக அறிவித்துள்ளார்.
Dunkerque நகரில் இருக்கும், சுகாதார நிலமைகள், மருத்துவமனை சூழ்நிலைகளை பார்வையிட்ட அவர், அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பிரான்சில் சுகாதார நிலமைகள் மோசமடைந்து செல்கின்றன. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் வார இறுதி நாட்களில் Dunkerque நகருக்கு ஊடரங்கு பிறப்பிக்கப்படுவதாக கூறினார்.
இருப்பினும், அத்தியாவசிய கடைகள், நிறுவனங்கள் திறந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.