ஆசையாக கையை போட்டு செல்பி எடுக்க வந்த ரசிகரை தட்டி விட்ட ஹார்திக் பாண்ட்யா! வைரலாகும் வீடியோ
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யாவிடம் ரசிகர் ஒருவர் கையை வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போது, அவர் கையை தட்டி விட்ட வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர்(2021) மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடருக்கு பின் ஹார்திக் பாண்ட்யாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டி மற்றும் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹார்திக் பாண்ட்யாவின் பெயர் இடம் பெறவில்லை.
கடந்த சில காலங்களாகவே பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே அந்தளவிற்கு இல்லாத காரணத்தினால், ஹார்திக் பாண்ட்யா பெங்களூருவில் இருக்கும் கிரிகெட் அகாடாமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் உணவகம்( எந்த இடம் குறிப்பிடவில்லை) ஒன்றிற்கு சென்றிருந்த போது, அங்கிருந்த ரசிகர்கள் இவரிடம் செல்பி எடுக்க முற்பட்டனர்.
அப்போது ஒரு ரசிகர் அவர் மீது கையை வைத்து செல்பி எடுக்க முயன்றார். ஆனால், ஹார்திக் பாண்ட்யாவோ அவருடைய கையை விட்டு சென்றார்.
இதைக் கண்ட இணையவாசிகள் ஹார்திக் பாண்ட்யாவின் செயலை Full of attitude என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.