அரச குடும்பத்தை பாதிக்கவுள்ள முழு நிலவு சந்திர கிரகணம்! ஜோதிடர் கணிப்பு
மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோருக்கு பாரிய சவால்கள் காத்திருப்பதாக ஜோதிடர் கணிப்பு.
அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறும் அதே நாளில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது மகன்கள் இளவரசர் வில்லியம், ஹரி மற்றும் அவர்களது மனைவிகள் கேட் மிடில்டன் மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோர் வரும் நாட்களில் பாரிய சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்று Joy Yascone-Elms எனும் பெண் ஜோதிடர் கணித்து கூறியுள்ளார்.
நவம்பர் 8-ஆம் திகதி நிகழவிருக்கும் முழு நிலவு சந்திர கிரகணம் ரிஷப நட்சத்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளதால் பிரித்தானிய அரச குடும்பத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிடர் கூறியுள்ளார்.
"குறிப்பாக மன்னர் சார்லஸ், வில்லியம், கேட் மிடில்டன், ஹாரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
மார்ச் 21, 2020 முதல், மன்னர் சார்லஸ், ராணி கமிலா, வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி, மற்றும் சசெக்ஸின் இளவரசர் இளவரசி உட்பட பல அரச குடும்ப உறுப்பினர்கள் கடினமான, மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வலிமிகுந்த கிரக சவால்களில் ஒன்றைக் கடந்து செல்கின்றனர்.
இந்த வலிமிகுந்த காலம் மார்ச் 7, 2023 வரை நீடிக்கும்" என்று அவர் கூறினார்.
Twitter
Joy Marie
அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறும் அதே நாளில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.