சேன்ஸலர் ரிஷி சுனக் எப்போது வேண்டுமானாலும் பதவி இழக்கலாம்: கடும் அதிருப்தியில் போரிஸ் ஜோன்சன்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் சேன்ஸலர் ரிஷி சுனாக் இடையேயான மோதம் போக்கு பொதுவெளியில் அம்பலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமக்கு எதிராக சதி திட்டம் தீட்டுவதாக சேன்ஸலர் ரிஷி சுனக் மீது போரிஸ் ஜோன்சன் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் பின்பற்றப்படும் பயணக் கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தை சேதப்படுத்தும் என்று எச்சரித்த சுனக்கின் கடிதம் கசிந்த சம்பவத்தை அறிந்த பின்னரே இருவருக்கும் இடையேயான மோதல் பூதாகரமாக வெடித்ததாக கூறப்படுகிறது.
ரகசியம் காக்கப்பட்ட அந்த கடிதம் கசிய காரணம் சேன்ஸலர் சுனக் என நம்பும் பிரதமர் போரிஸ் ஜோன்சன், தமது சக அலுவலகர்கள் முன்னிலையில் கோபம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, சேன்ஸலர் பொறுப்பில் இருந்து ரிஷி சுனக்கை வேறு பொறுப்புகளுக்கு மாற்றவும் பிரதமர் போரிஸ் திட்டமிட்டதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் சேன்ஸலர் சுனக் மீதான பிரதமர் போரிசின் கோபம் கசிந்த அந்த கடிதம் அல்ல எனவும், ரிஷி சுனக்கின் மக்கள் செல்வாக்கு 74 சதவீதமாக இருப்பதும், பிரதமர் ஜோன்சனின் மக்கள் செல்வாக்கு சரிவடைந்து 34 புள்ளிகளில் இருப்பதுமே காரணம் என கூறப்படுகிறது.
மேலும், அமைச்சர்களின் செலவீனங்களை குறைத்துக்கொள்ள சுனக் கூறியிருந்தும், பிரதமர் போரிஸ் அதை கருத்தில் கொள்ளவில்லை எனவும், அதுவும் இருவருக்கும் இடையேயான மோதல் போக்குக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் 400 பில்லியன் பவுண்டுகள் செலவிட ரிஷி சுனக் முன்வந்ததே அவரது செல்வாக்கு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. இதனால் கன்சர்வேட்டிவ் கட்சி வாக்காளர்களின் 32% ஆதரவை ஒரேயடியாக அள்ளியுள்ளார்.
எஞ்சிய போரிஸ் அரசாங்க அமைச்சர்கள் 12% தாண்டாத நிலையில், சேன்ஸலர் ரிஷி சுனக்கின் இந்த வளர்ச்சி பிரதமர் போரிஸ் உட்பட பலரையும் பதற்றமடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.