புலம்பெயர்வோர் முன் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் செய்த வேடிக்கை: வீடியோ வைரலானதால் சிக்கல்
பிரான்சில் புலம்பெயர்வோர் வழக்கமாக கூடியிருக்கும் இடத்தில் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் செய்த ஸ்டண்ட் தொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மீது விசார
ஒரு பக்கம், பிரான்சின் கலாயிஸ் பகுதியில், பிரித்தானியா நோக்கி செல்லும் ட்ரக்குகளில் ஏறி பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோர் காத்திருக்கிறார்கள்.
மறுபக்கம், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவ வீரர்கள் நாடு முழுவதும் ரோந்து செல்கிறார்கள். 2015ஆம் ஆண்டு, இஸ்லாமியவாத தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து, அப்போதிருந்தே இராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வழக்கம் உள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவுக்குள் நுழையக் காத்திருக்கும் புலம்பெயர்வோர் முன்னாலேயே, பிரான்ஸ் இராணுவ வீரர்கள் சிலர், தங்கள் வாகனத்தில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று வெளியானது.
புலம்பெயர்வோர் முகாமிட்டுள்ள இடத்தில் தங்கள் ஜீப் ஒன்றை வேகமாக பின்பக்கமாக ஓட்டுவது, தண்ணீருக்குள் ஓட்டுவது என இராணுவ வீரர்கள் வேடிக்கை காட்ட, அதை வேடிக்கை பார்க்கும் புலம்பெயர்வோர் உற்சாகக் குரல் எழுப்பும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
ஒரு கட்டத்தில், அந்த ஜீப் சேற்றில் சிக்கிக்கொள்ள, அதை சேற்றிலிருந்து விடுவிக்க அங்கிருந்த புலம்பெயர்வோரே உதவியுள்ளார்கள்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அது இராணுவ அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றுள்ளது.
அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்கள் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.