கனேடிய பொலிசாரால் நேர்ந்த துயரம்... சென்னை தம்பதியின் பிஞ்சு மகனுக்கு நடைபெற்ற இறுதிச் சடங்கு
கனடாவில் தவறான பாதையில் திருடனைத் துரத்திய பொலிசாரால் சென்னை தம்பதி ஒன்று, அவர்களின் பேரப்பிள்லையுடன் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.
இறுதிச் சடங்குகள்
தொடர்புடைய தம்பதியின் இறுதிச் சடங்குகள் ஏற்கனவே நடைபெற்றிருந்த நிலையில், பிறந்து 3 மாதமேயான ஆதித்ய விவான் என்பவரின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை Markham பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் விட்பியில் பிரதான சாலை 401 இல் நடந்த கோர விபத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி மணிவண்னன் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் பரிதாபமாக மரணமடைந்தனர்.
இவர்களுடன், பிறந்து 3 மாதமேயான ஆதித்ய விவானும் சம்பவயிடத்திலேயே மரணமடைய, குழந்தையின் பெற்றோர் கோல்குநாத் மற்றும் அஷ்விதா தம்பதி பலத்த காயங்களுடன் தப்பினர்.
இந்த நிலையில், புதன்கிழமை குழந்தை ஆதித்ய விவானின் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதித்ய விவான் பிறந்ததும் முதலில் கைகளில் வாங்கியவர் பாட்டி மகாலட்சுமி என்றும், முதல் முதலில் நெற்றியில் முத்தமிட்டவர் தாத்தா மணிவண்ணன் என்றும் உறவினர் பிருந்தா கண்கலங்கியுள்ளார்.
திங்களன்று மணிவண்ணன் மற்றும் மகாலட்சுமியின் இறுதிச் சடங்குகள் இதே பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்த தம்பதி விபத்திற்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கனடா வந்துள்ளனர் என்றே கூறப்படுகிறது.
விரிவான விசாரணை
தவறான பாதையில் சரக்கு வாகனம் ஒன்றை அதிவேகமாக துரத்திய பொலிசாரால், இந்த வாகன விபத்து நேர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் மொத்தம் 6 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியுள்ளது.
குழந்தை ஆதித்யாவின் பெற்றோர் 33 வயதான கோகுல்நாத் மற்றும் 27 வயதான அஷ்விதா ஆகியோரும் விபத்தில் சிக்கிய அதே வாகனத்தில் பயணித்துள்ளனர். அவர்கள் இருவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இருவருக்கும் பல்வேறு அறுவைசிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது. இருவரும் தற்போதைய தருணத்தில் கருத்து தெரிவிக்கும் மன நிலையில் இல்லை என்றே கூறப்படுகிறது.
பொலிசாரால் துரத்திய சரக்கு வாகனத்தின் 21 வயதான சாரதியும் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் பயணித்த 38 வயதான பயணி படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் உள்ளூர் பொலிசார் விரிவான விசாரணை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |