எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை... எப்ஸ்டீன் விவகாரத்தில் பில் கிளிண்டன் அதிரடி வாக்குமூலம்
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது உறவு குறித்து சாட்சியமளிக்க ஹிலாரியை கட்டாயப்படுத்தியதற்காக குடியரசுக் கட்சியினரைத் தாக்கி பில் கிளிண்டன் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தனக்குத் தெரியாது
முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டனுக்கு நியூயார்க்கின் சப்பாக்குவாவில் எப்ஸ்டீனுடனான தனது விரிவான தொடர்புகள் குறித்து சாட்சியமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் மேற்பார்வைக் குழுவிடம் கிளிண்டன் கூறியுள்ளார்.
எப்ஸ்டீன் தொடர்பில் தாம் எதையும் பார்க்கவில்லை, எந்தத் தவறும் செய்யவில்லை என்று கிளிண்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை சாட்சியமளித்த ஹிலாரி, தாம் எப்ஸ்டீனை ஒருபோதும் சந்தித்ததில்லை என்றும், அவருடனான பில்லின் உறவு குறித்த அனைத்து கேள்விகளையும் தாம் ஒத்திவைப்பதாகவும் கூறினார்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் குடியரசுக் கட்சியினர் மீதான தனது விரக்தியை அடக்கிக் கொள்ளவில்லை. தமது சாட்சியத்தை அவர் பதிவு செய்வதற்கு முன்னர் கோபத்துடன் பேசிய கிளிண்டன், நீங்கள்தான் ஹிலாரியை சாட்சியமளிக்க வைத்தீர்கள்.
அவருக்கும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒன்றுமில்லை என்று கிளின்டன் கொந்தளித்துள்ளார். எப்ஸ்டீன் விவகாரத்தில் நீங்கள் 10 பேருக்கு இல்லை 10,000 பேருக்கு சம்மன் அனுப்பியிருந்தாலும், அதில் ஹிலாரியையும் சேர்த்தது உண்மையில் முறையல்ல.
அவர் எப்ஸ்டீனை சந்தித்ததும் இல்லை, அவரது தங்குமிடங்களில் சென்று பார்த்ததும் இல்லை என்றார். மேலும், எப்ஸ்டீன் விவகாரத்தில் தனக்கு எதுவும் தற்போது ஞாபகம் இல்லை என்றும் பில் கிளிண்டன் உடைத்துப் பேசியுள்ளார்.
இரண்டு புகைப்படங்கள்
முதலாவதாக, எப்ஸ்டீன் செய்த குற்றங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. நீங்கள் எத்தனை புகைப்படங்களைக் காட்டினாலும், அந்த 20 வருட பழைய புகைப்படங்களைப் பத்தின உங்க விளக்கத்தை விட, நாளின் இறுதியில் எனக்கு இரண்டு விடயங்கள் முக்கியம் என கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டே புகைப்படங்களை வைத்தே பில் கிளிண்டனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளால் துளைத்துள்ளனர். ஒன்று, அவர் ஒரு அடையாளம் தெரியாத பெண்ணுடன் ஒரு தனியார் விமானத்தில் பயணிக்கிறார்.

மற்றொரு புகைப்படம் அவர் எப்ஸ்டீனின் காதலி என கூறப்படும் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுடன் நீச்சல் குளம் ஒன்றில் காணப்படுகிறார்.
ஆனால், எப்ஸ்டீனின் குற்றச்செயல்கள் மொத்தம் தங்களிடம் இருந்து ம்றைக்கப்பட்டதாகக் கூறும் கிளிண்டன், அதன் காரணமாகவே தற்போது தாம் சாட்சியமளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தன் பின்னர், அவருடனான உறவுகளை தாம் துண்டித்துக் கொண்டதாகவும் கிளிண்டன் சாட்சியமளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |