பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாக்கெடுப்பு... பரபரப்பை ஏற்படுத்திவரும் விவாதம்
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்னும் விடயம் இணையத்தில் விவாதப்பொருளாகிவருகிறது.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில்...
பிரித்தானியாவில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததிலிருந்தே, லேபர் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது.

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையக்கூடும் என்பது போன்ற செய்திகளும் அவ்வப்போது வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், நியூ ஸ்டேட்ஸ்மேன் (New Statesman) என்னும் பிரித்தானிய ஊடகத்தின் தலைமை ஆசிரியரான டாம் (Tom McTague) என்பவர், அப்படி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையலாமா என கேட்கும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவாரானால், பிரித்தானிய மக்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையலாம் என்றே வாக்களிக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளார்.
லேபர் கட்சியினரில் பெரும்பான்மையினரும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரெக்சிட் ஒரு தவறு, மீண்டும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவேண்டும் என்னும் கருத்து உடையவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் டாம் தெரிவித்துள்ளார்.

நாளை திடீரென கெய்ர் ஸ்டார்மர் வந்து மக்கள் முன் ஒரு உரையாற்றி, எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்படும் ட்ரம்ப், புடின் போன்றவர்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையலாமா என்பது குறித்து ஏழு வாரங்களில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்போகிறோம் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? இப்போதைய கருத்துக்கணிப்புகளைப் பார்க்கும்போது, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையலாம் என்றே பெரும்பான்மையோர் வாக்களிக்கக்கூடும் இல்லையா என்கிறார் டாம்.
ஆக, பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையலாமா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்னும் விடயம், இணையத்தில் தொடர்ந்து பேசுபொருளாகிவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |